கேரளாவில் கத்தி ஏற்படுத்திய நஷ்டம்..
விஜய் நடித்த கத்தி கேரளாவில் இதுவரை எந்த தமிழ்ப்படமும் செய்யாத வசூலை செய்து வருகிறது. கடந்த 22ஆம் திகதி வெளியான முதல் நாளிலேயே ஒரு கோடி ரூபாய் வசூலை கொடுத்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்கள் வேலை நாட்களாக இருந்தாலும் வசூல் குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் அதிக வசூலை கொடுத்துள்ளது கத்தி.
இந்நிலையில் கேரளாவில் வெளியான மலையாள படங்களின் வசூல் பெருமளவு குறைந்துள்ளதாகவும், இதற்கு காரணம் கத்தியின் வெற்றி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தி படத்தை பார்த்தவர்கள் கூட அடுத்து பூஜை, ஹேப்பி நியூ இயர் படங்களையே பார்க்க விரும்புவதாகவும், இதன் காரணமாக மலையாள படங்களின் வசூல் பெருமளவு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
தீபாவளியை முன்னிட்டு மலையாளத்தில் நயனா, கூட்டத்தில் ஓரல், குருத்தம் கெட்டவன் ஆகிய மூன்று படங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
No comments: