முதல் நாள் வசூலில் 'கத்தி' சாதனை: ஏ.ஆர்.முருகதாஸ் மகிழ்ச்சி...
கத்தி' படத்தின் முதல் நாள் வசூல் பெரும் சாதனை படைத்திருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கத்தி'. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். தீபாவளி விடுமுறை தினங்களைக் கணக்கில் கொண்டு திரைக்கு வந்தது.
'துப்பாக்கி' படத்திற்கு பிறகு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைப்பில் வெளியான படம் என்பதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. படமும் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியானது.
படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 'கத்தி' படத்தின் வசூலை விரைவில் வெளியிட இருக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, "'கத்தி' படத்தின் முதல் நாள் வசூல் முந்தைய தென்னந்திய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து இருக்கிறது. தமிழ் / கர்நாடகா / கேரளா மற்றும் வட இந்தியா - ரூ.16.45 கோடி, வெளிநாட்டு வசூல் - ரூ.7.35 கோடி. மொத்தம் ரூ.23.80 கோடி முதல் நாளில் வசூல் செய்திருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: