குழந்தைகள் கத்தி படத்தை பார்க்க கூடாதா?
கத்தி திரைப்படத்தின் எதிர்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவது உள்ள தமிழ் குடும்பங்களில் பல சின்ன சின்ன குழந்தைகள் ரசிகர்களாக உள்ளனர்.அதனால் அவர் படம் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்க, லண்டனில் உள்ள 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.லண்டனில் வெளியாகும் படங்களுக்கு 12 என்ற சர்டிபிகேட் கொடுப்பார்களாம். அந்த மாதிரி படங்களைத்தான் சிறுவர்கள் தனியாக சென்று பார்க்க முடியுமாம். ஆனால், கத்தி படத்திற்கோ 12ஏ என்ற சர்டிபிகேட்டை பிரிட்டன் சென்சார்போர்டு வழங்கியிருக்கிறது. அதனால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் படத்தை பார்க்க வேண்டுமென்றால் 12 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன்தான் பார்க்க முடியுமாம். -
No comments: