ஷாருக்கானின் 'happy new year' வசூல் சாதனை.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த 'happy new year' படம் வெளியாகிய மூன்று நாட்களில் மட்டும் 108 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்த 'happy new year' திரைப்படம் கடந்த 24ம் திகதி வெளியாகியது. இந்நிலையில் 'happy new year' வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுமாத்திரமல்லாமல் முதல் நாளில் மட்டும் 45 கோடி வசூல் செய்து சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரின் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் மிகப்பெரிய பாலிவுட் படம் 'happy new year' தான். படத்தின் அதிகாரப்பூர்வ facebook பக்கத்தை ,டிரெய்லரை பல லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷாரூக்கான் இதில் டான்சர், திருடன் என்று இரு வேடங்களில் நடிக்கிறார். 'சிக்ஸ்பேக் தோற்றத்தை அடைவதுதான் மிகக்கஷ்டமானது என்ற எண்ணம் எல்லோருக்குமிருக்க eight pack தோற்றத்துடன் இந்தப்படத்தில் ஷாருக் அவதாரம் எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: