இப்படி ஆகி போச்சே - அதிர்ச்சியில் யான் பட குழு
சமீபகாலமாக படங்களை தயாரித்து வெளியிடுவது எவ்ளோ பெரிய காரியமாக இருக்கிறது போல் தற்போது டிவி சேனல்க்கு படங்களை விற்பதும் சவாலாக இருக்கிறது. எந்த ஒரு பெரிய படமாக இருந்தாலும் முதல் முன்று சேனலுக்கு இடைய படத்தை வாங்க கடும் போட்டியே நடக்கும் ,ஆனால் அந்த முன்றாவது இருக்கும் சேனல் மற்றவர்கள் கேட்டதை விட கம்மியாக கேட்டு படத்தை வங்கி கொள்வார்கள், பினே படம் கொடுக்கவில்லை என்றால் பெரிய பிரச்சனை ஆகி விடும் அல்லவா.அது போல் யான் திரைப்படம் அக்டோபர் 2 ந் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் சேனல் உரிமையை ஜெயா தொலைக்காட்சிதான் வாங்கியிருக்கிறதாம். ரிலீஸ் தினத்தன்று தடபுடலாக இந்த படத்தை விளம்பரம் செய்துவிடும் நோக்கத்தில் முன் கூட்டியே ஜீவா, துளசி, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் படக்குழுவினருடன் இன்டர்வியூ எடுத்தார்களாம். நாளை திட்டமிட்டபடி அது ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.ஆனால் மக்கள் முதல்வர் என்று அதிமுக வினரால் மரியாதையோடு அழைக்கப்படும் ஜெ. தற்போது சிறையில் இருப்பதால், ஜெயா தொலைக்காட்சியில் கொண்டாட்டமான காட்சிகளுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுவிட்டதாம். அதனால் யான் குழுவினர் சற்றே கிலியடித்துப் போயிருக்கிறார்கள்.இதனால் கேட்கவும் முடியாமல் மேல்லுவும் முடியாமல் தவியாய் தவிக்கிறது யான் பட குழு .
No comments: