கார்த்தியை ஓவராக புகழ்ந்து தள்ளிய சினிமாக்காரர்கள்! -
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த கார்த்தி, மெட்ராஸ் படத்தின் ஹிட் காரணமாக உற்சாக மனநிலையில் காணப்படுகிறார். வழக்கம் போல் மெட்ராஸ் படம் இரண்டு நாள் ஹிட் என்றதும் சக்சஸ் மீட் நடத்தினார்கள். அப்போது, இந்த படத்தில் கார்த்தியை தவிர வேறு எந்த ஹீரோவும் நடிக்க மாட்டார்கள். காரணம், அந்த படப்பிடிப்பு நடைபெற்ற ஹவுசிங் போர்டு ஏரியாவில் மற்ற நடிகர்கள் என்றால் காலை கீழே மிதிக்க மாட்டார்கள். ஆனால் கார்த்தியோ கேரவன்கூட கேட்காமல் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபடி நடித்தார்.
மேலும், பெரிய நடிகராச்சே, எப்படி இயல்பாக பழகப்போகிறார் என்று நாங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க அவரோ, வந்த வேகத்திலேயே அனைவரிடமும் தோள் போட்டு அன்பாக பழகினார். அதனால் எங்களுக்கு அவர் மீதிருந்த பயம் போனது. அதனால்தான் அனைவரும் இயல்பாக நடித்திருந்தோம் என்று அப்படத்தில் இன்னொரு ஹீரோ-ஹீரோயினாக நடித்திருந்த கலையரசன், ரித்விகா இருவரும் பேசினர்.
ஆனால் இதற்கெல்லாம் மேலாக, கார்த்தி மக்கள் நாயகன் எமஜிஆர் மாதிரி தெரிகிறார். இப்போது எம்ஜிஆர் இல்லாததால் அடுத்த மக்கள் நாயகன் கார்த்திதான் என்று அவருக்கு அப்பாவாக நடித்த ஜெயராம், கார்த்தியை ரொம்ப உசரத்துக்குகொண்டு சென்றார்.
இதே மாதிரிதான் முன்பு கார்த்தி நடித்த சில படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வந்தபோது, அவரது படங்களில் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்ளும் சில சினிமா டைரக்டர்கள், சூர்யாவும், கார்த்தியும் எம்ஜிஆர், சிவாஜி மாதிரி என்று புகழ்ந்தார்கள். அதன்பிறகு கார்த்தி நடித்த படங்கள் ஓடாதபோது எந்த புகழ்ச்சியும் இல்லை. இப்போது மறுபடியும் ஓவர் புகழ்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். -
No comments: