கத்தி' வெளியாவது சந்தேகம்: எதிர்ப்பு போராட்டம் தீவிரம்
சத்யம் திரையரங்கம் மீது தாக்குதல் | படம்: சமூக வலைத்தளத்தில் இருந்து
'கத்தி' திரைப்படம் தொடர்பாக எங்களை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. எங்களது முடிவில் மாற்றமில்லை என்கிறது தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு
'கத்தி' படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்தது. நாளை காலை முதல் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டும் என்று படக்குழு நேற்றிரவு (அக்.20) அறிவித்தது. ஆனால், நேற்றிரவே 'கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த சத்யம் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் ஆகியவை மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் தலைவர் வேல்முருகனைத் தொடர்பு கொண்ட போது "நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய நிலைப்பாடு தான் இப்போது கூறுகிறேன். லைக்கா என்ற பெயரை நீக்கிவிட்டால் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
படக்குழு நேற்றிரவு பிரச்சினை சுமூகமாக முடிவுற்றது என்று அறிவித்திருக்கிறது. ஆனால், எங்களுக்கு இது குறித்த எந்த ஒரு தகவலும் வரவில்லை. தாக்குதல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமில்லை." என்றார்.
மேலும் 'கத்தி' வெளியாவதாக இருந்த அனைத்து திரையரங்குகளுக்கும் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments: