20 நாட்கள் ஜெ., சிறைவாசம் முடிகிறது ; ஜெ., சசிகலா தண்டனை நிறுத்தி வைப்பு
புதுடில்லி: கடந்த 20 நாட்களாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெ., சிறைவாசம் முடிகிறது. இவர் மீதான சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பும், தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதுடன், இவருக்கு ஜாமினும் வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கொண்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது.
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., மீதான ஜாமின் மனு விசாரணை இன்று நடக்கிறது . அ.தி.மு.க., இயக்கம் துவக்கி இன்று 43 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இம்மனு விசாரணை நடப்பதால் ஜெ.,வுக்கு இன்று ஜாமின் கிடைத்ததால் ஆண்டு விழாவுடன் அ.தி.மு.க, தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எதிர்பார்த்தபடி ஜாமின் கிடைத்தது இதனால் தொண்டர்கள் , அ.தி.மு.க.,கட்சியினர் வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
ரூ.66 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ந்த வழக்கில் ஜெ., வுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்தது. இதனையடுத்து அவர் பெங்களூரு பரபரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பெங்களூரு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை நீதிபதி சந்திரசேகரா தள்ளுபடி செய்தார். இதனையடுத்து ஜெ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணை நடந்தது.
சுப்பிரமணியசாமி ஆஜர்: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் நான்தான் மனுதாரர். எனது கருத்தையும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க அனுமதி வழங்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் அவர் ஆஜராகி ஜெ., ஜாமினுக்கு அவர் தனது கடும் ஆட்சேபத்தை தெரிவித்தார்.
No comments: