Header Ads

இது அநியாயம்,. இது சட்ட விரோதம் ; ஜெ., வக்கீல்கள் கடும் ஆவேசம்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெ., தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி விசாரிக்க மறுத்ததால் இவரது தரப்பு வக்கீல்கள் கடும் ஆவேசமுற்றனர். கோர்ட் வெளியே வந்த ஜெ., தரப்பு ஜூனியர் வக்கீல்கள் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தனர். இது அநியாயம், சட்ட விரோம் என்று கருத்து தெரிவித்தனர். ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்ன கலா இந்த மனு குறித்து விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர். 



கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். 


தொடர்ந்து வக்கீல்கள் நிருபர்களிடம் பேசுகையில், 8 கோடி மக்களின் ஆதரவு பெற்றவரான ஜெ.,வுக்கு ஜாமின் தர மறுத்தது வஞ்சித்த செயல் ஆகும். இதனை ஜீரணிக்க முடியவில்லை. இது கண்டனத்திற்குரியது. நீதிபதி விசாரிக்க மறுத்தது சட்ட விரோதம். அநியாயம். அக்கிரமம். இது குறித்து நாங்கள் பார் அசோஷியேசனுக்கு தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஜனாதிபதிக்கும் மனு கொடுப்போம். இந்த விவகாரத்தில் கர்நாடக தலைமை நீதிபதி தலையிட்டு ஜெ., வை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு உணர்ச்சி பொங்கிட பேசினர். 


சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Powered by Blogger.