தனுஷ், சித்தார்த்,சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தின் டீஸர் 70 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம் , எமி ஜாக்சன் நடிக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
எனினும், சில போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடர்ந்து வருவதால் படத்தின் ரிலீஸ் நவம்பருக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீஸரைப் பாராட்டி இயக்குநர் ராஜமெளலி, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் என பலரும் ட்விட்டரில் ரீட்விட் செய்திருந்தனர்.
டீஸரைப் பாராட்டிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் ஷங்கர். மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருவதாகவும், விரைவில் படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
No comments: