சுவேதா பாசு 6 மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க கோர்ட்டு உத்தரவு
ஆந்திர மாநில போலீசார் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய தெலுங்கு நடிகை சுவேதா பாசு என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி இயக்குனர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
நடிகை சுவேதா பாசு, தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறினார். நடிகை சுவேதா பாசு அங்குள்ள ஒரு மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகையின் தாயார் எர்ரமஞ்சில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகள் மேஜர் என்பதால் அவர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருப்பதா? அல்லது வீட்டுக்கு திரும்புவதா? என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அவரை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து இருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல். எனவே அவரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு, அந்த நடிகைக்கு இன்னும் 6 மாதங்களுக்கு ஆலோசனையும், மறுவாழ்வும் தேவைப்படுகிறது. எனவே அவர் மேலும் 6 மாதங்களுக்கு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுபற்றி நடிகையின் தாயார் சார்பில் ஆஜரான வக்கீல் பிரதீப்குமார் கூறும்போது, ‘‘இந்த கோர்ட்டு உத்தரவை எதிர்த்து செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். அந்த மனு இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்’’ என்றார்.
No comments: