நடிகர் விஜய் கைதாகிறாரா? அதிர்ச்சியில் திரையுலகம்....
விஜய்க்கு மட்டும் பிரச்சனை எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி செய்த ஊழலை சுட்டி காட்டி பேசினார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 ஜி இழப்பு என்பது, மக்களுக்காக சலுகை விலையில் அலைக்கற்றையை விற்றதால் வந்ததுதான் என்ற வாதம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு மறுக்கவும் இல்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக நீதிமன்றமும் எப்போதும் கூறியது இல்லை. இழப்பு ஏன் என்றுதான் வாதம் நடந்து வருகிறது. இதில், துறைக்கு சம்பந்தமே இல்லாத சிலர் தனிப்பட்ட முறையில் ஆதாயமடைந்தது பற்றியும் வழக்கு நடந்து வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ஒரு சினிமா இயக்குநரும், நடிகரும் இந்த வழக்குக்கு எப்படி படத்தில் பதில் சொல்ல முடியும். 2ஜியில் ஊழல் நடந்ததாகச் சொல்ல முடியும் என்று கேட்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் நீதித்துறையையே அவமதிக்கும் செயல் என்றும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையை ஏற்று விஜய், முருகதாஸ் மற்றும் லைகா நிறுவனத்தை சார்ந்தவர்கள் மீது நோட்டிஸ் அனுப்பபட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் கைதாகவும் வாய்ப்பிருப்பதாக ஒரு சிலரால் கூறப்படுகிறது.
இந்த காட்சியை சென்ஸார் போர்ட் அனுமதித்த பின் தானே படம் வெளியானது, பின் எப்படி கேஸ் போட முடியும்? என்றும் ரசிகர்கள் இளைய தளபதிக்கு ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
No comments: