காதல் தோல்வியில் நடிகை தற்கொலை: பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
காதல் தோல்வியில் இந்தி நடிகை தற்கொலை செய்துகொண்டார். இதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நடிகையின் பெயர் அர்ச்சனா பாண்டே. இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் தொழில் செய்தார். பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தார். நிறைய இந்தி படங்களில் நடித்து வந்தார். மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அந்த வீடு கடந்த இரண்டு நாட்களாக பூட்டி கிடந்தது.
வீட்டுக்குள் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் பக்கத்து வீட்டில் வகித்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நடிகை அர்ச்சனா பாண்டே பிணமாக கிடந்தார். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அர்ச்சனா பாண்டேயின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தனது காதலனுக்கு அடிக்கடி இவர் பேசி இருப்பது தெரிய வந்தது. காதல் தோல்வியால் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
No comments: