ஆஃப் செஞ்சுரி அடித்த அஞ்சான்
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த படம் அஞ்சான். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவியும் இணைந்து தயாரித்த படம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் இசை அமைத்திருந்தார். ரஜினிக்கு பாட்சா மாதிரி, கமலுக்கு நாயகன் மாதிரி, சூர்யாவுக்கு அஞ்சான் என்கிற அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
தமிழ் நாட்டில் சுமார் 500 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் அதிகபட்சம் 3வது வாரத்திலேயே ஷிப்டிங்க ஆகத் தொடங்கிறது.
"தற்போது தமிழ் நாடு முழுவதும் 100 தியேட்டர்களுக்கு மேல் ஒடிக் கொண்டிருந்தாலும் தொடர்ச்சியாக 50 நாளை கடந்திருப்பது சென்னை எஸ்கேப், அபிராமி, பிவிஆர் மால் தியேட்டர்ளில் மட்டும்தான்" என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
No comments: