சுத்தமான இந்தியா’ சச்சின், கமல் ஹாசன், பிரியங்காவிற்கு பிரதமர் மோடி அழைப்பு
டெல்லியில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இந்த அமைப்பில் இணைய 9 பேருக்கு அழைப்பு விடுப்பதாக கூறினார். இந்த 9 பேரும் இயக்கத்தில் இணைய மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுவிக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. இது மந்திரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பு மட்டும் இல்லை.
இது பொதுமக்களுடைய பொறுப்பும் கூட. இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் நாடு முழுவதும் வெற்றி கண்டது. அதேபோல் இந்தியாவை சுத்தம் செய்வோம் என்று இயக்கத்தில் 125 கோடி மக்களும் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளை நம்புங்கள். சமூக வலைதள பக்கத்தில் ‘சுத்தமான இந்தியா’ இயக்க பிரச்சாரத்திற்கான உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது. நாம சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதியளிக்க வேண்டும். நாம் வெளிநாடு செல்லும் போது அந்த நாடுகள் எப்படி சுத்தமாக இருக்கிறது என்று பார்க்கிறோம், மக்கள் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசுவதை நாம் அங்கு பார்க்கவில்லை. எனவே தான் அங்கு சுத்தமாக உள்ளது. என்றார்.
நிகழ்ச்சியில் சுத்தமான இந்தியாவை உருவக்குவோம் என்ற உறுதிமொழியை பிரதமர் மோடி வாசிக்க, மாணவர்கள், அமைச்சர்கள் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
No comments: