Header Ads

காதலர்களுக்கு சிம்பு கொடுக்கும் டிப்ஸ்!

சினிமாவில் ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் பஞ்ச்தான் அவ்வப்போது கொடுத்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக அதெல்லாம் மறைந்துவிட்டது. மாறாக, ஆளாலுக்கு ஏதாவது ஒரு வகையில் பஞ்ச் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். ஏன் சந்தானம்கூட சில சமயங்களில் பஞ்ச் கொடுக்கிறார். ஆனால், சிம்புவோ காதலர்களுக்கு நிறைய பஞ்ச் கொடுக்கிறாராம்.

நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு நடிகைகளை காதலித்து பிரிந்தவர் என்பதால், அவருக்கு காதலில் நல்ல அனுபவம் கிடைத்து விட்டது. அதனால், இந்த காலத்து காதலிகளை எப்படி கரெக்ட் பண்ணுவது, எப்படி மெயின்டெயின் பண்ணுவது என்றெல்லாம் ரசிகர்களுக்கு எடுத்துக்கொடுக்கிறாராம்.


அதில் ஒரு டயலாக்தான், மாஜி காதலி நயன்தாராவுடன் அவர் நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தில், நூறு பொண்ணை கரெக்ட் பண்ணுவது ஈஸி. ஆனா ஒரு பொண்ணை மெயின்டெயின் பண்றது கஷ்டம் என்றொரு பஞ்ச்சை ரசிகர்களைப்பார்த்து கொடுக்கிறாராம். இது மட்டுமின்றி, இன்னும் படத்தில் ஆங்காங்கே காதலர்களுக்கு நிறைய டிப்ஸ் கொடுக்கிறாராம் சிம்பு. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனது படம் திரைக்கு வருவதால், ரசிகர்கள் மனதில் ஏதோ ஒரு வகையில் அழுத்தமான பதிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுக்கிறாராம் சிம்பு. 

No comments:

Powered by Blogger.