Header Ads

பிரபல நடிகை அவரது ஆண் நண்பருடன் கைது!

இந்தி நடிகை சனா கானையும், அவரது நண்பர் இஸ்மாயில் கானையும் முன்னிலைப்படுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி தாள்களில் கட்டுரை வெளியானது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள், இதை ஊடகங்களுக்கு கசியவிட்ட நபர் யார் என்று விசாரித்தனர்.

அப்போது, பூனம் கண்ணா என்ற பெண் இந்த வேலையை செய்ததாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், அந்த பெண் மீது நடிகை சனாகானுக்கும், அவரது நண்பர் இஸ்மாயில் கானுக்கும் ஆத்திரம் ஏற்பட்டது.

கைது

இந்தநிலையில், கடந்த 21–ந் தேதி அவர்கள் இருவரும் மும்பை அந்தேரியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி முன்பு பூனம் கண்ணா நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். உடனடியாக அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்மாயில் கான், பூனம் கண்ணாவின் கையை பிடித்து முறுக்கியதாகவும், தகாத இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கலக்கம் அடைந்த பூனம் கண்ணா, இது தொடர்பாக அம்போலி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நடிகை சனா கானையும், அவரது நண்பர் இஸ்மாயில் கானையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.