செக்ஸ் பற்றி இலியானாவின் கமெண்ட்...!
தமிழில் இழுத்து போர்த்திக் கொண்டு நடிப்பார்கள், அப்படியே தெலுங்குப் பக்கம் போனால் கிளாமராக நடித்து அசத்துவார்கள், அப்படியே ஹிந்திப் பக்கம் போனால் அட, அவங்களா இது என ஆச்சரியப்பட வைப்பார்கள். அந்த அளவிற்கு அவர்களது தோற்றமும், பேச்சும் மாறிப் போகும். இலியானா, 'கேடி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் 'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இங்கு அதிகப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்தார். இங்கு பெரிதாக கிளாமரில் நடிக்காதவர், தெலுங்கில் அசத்தலான கிளாமரில் நடித்து பெயர் வாங்கினார். அப்படியே ஹிந்திப் பக்கம் 'பர்ஃபி ' படத்தில் அறிமுகமாகி ஒரே படத்தில் பெரும் புகழ் பெற்றார்.
தொடர்ந்து 'படா போஸ்டர் நிகலா ஹீரோ, மெயின் தேரோ ஹீரோ' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'ஹேப்பி என்டிங்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் செக்ஸ் பற்றிய ஒரு கமெண்ட் அடித்ததால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். “செக்ஸ் என்பது ஒருவேளை நம் உடம்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அது ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது, அது அவசியமான ஒன்றுதான்,” என்று சொல்லியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் கூட ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டவர்தான் இவர். அதாவது 16வது வயதிலேயே அப்பாவுடன் செக்ஸ் பற்றி விவாதித்திருக்கிறேன் என்றும் சொல்லி அப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இலியானாவின் இந்த வெளிப்படடையான பேச்சு பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
No comments: