சூரியை கண்ணீர் விட வைத்த விஷால்!
விஷால் சில நாட்களாகவே தமிழ் சினிமாவிற்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். நேற்று கூட திருட்டு விசிடி கும்பலை அவரே சென்று பிடித்து கொடுத்தார்.பாண்டிய நாடு, பூஜை படத்தில் இவருடன் இணைந்து நடித்த சூரியின் மகன் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். இது குறித்து சூரி மிகவும் உணர்ச்சி பொங்க தன் நன்றியை கூறியுள்ளார்.இதில் ‘என் மகன் சர்வான். அம்பட்டுச் செல்லம். சர்வானுக்கு முதல் பிறந்த நாள். குடும்பத்தில் ஒருவராக வந்திருந்து அண்ணன் விஷால் வாழ்த்தினார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான நாள். நன்றி விஷால் அண்ணன்’ என்று தெரிவித்துள்ளார்.
No comments: