Header Ads

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காதது குறித்து அவரது வழக்கறிஞர் என்ன சொன்னார் ?? -

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தனது தரப்பு வாதங்களை வைத்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஜெயலலிதா நிபந்தனை ஜாமீன் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டார். இருந்தாலும் நீதிபதி சந்திரசேகரா ஜாமீன் வழங்க விரும்பவில்லை. அதனால் ஜாமீன் வழங்கவில்லை என தீர்ப்பு அளித்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. இந்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ராம் ஜெதமாலனி கூறியுள்ளார். ஜாமீன் கேட்டு நாளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய போவதாக தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.