தொடர் தோல்வி...வருத்தத்தில் ஹீரோ
தன்னுடைய பெயரில் வந்த படம் நன்றாக இருக்கிறது, நன்றாக ஓடுகிறது, ஆனால், நாம் நடித்த படத்திற்கு வரவேற்பு இல்லையே என வருத்தத்தில் இருக்கிறாராம். அந்த 'குட்' தயாரிப்பாளரின் மகன். கடந்த மூன்று வருடங்களில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த 'ஃபிரண்ட், புன்னகை' படங்கள் மட்டுமே அவருடைய வெற்றிக் கணக்கில் உள்ள படங்கள். அந்தப் படங்களையும் வினியோகஸ்தர்கள் வெற்றிப் படங்கள் என்று சொன்னார்களா என்பது கேள்விக்குறிதான். சமீப காலமாக பெரிய இயக்குனர்களை நம்பி அவர் நடித்த படங்கள்தான் அவரது காலை வாரி விட்டிருக்கின்றன. கடைசியாக நடித்த பெரிய ஒளிப்பதிவாளரின் அறிமுக இயக்கத்தில் வந்த படமும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டது. அதனால், இனி பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறாராம்.
எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற முடியவில்லையே என்றும் சொல்லி வருகிறாராம். எவ்வளவோ இயக்குனர்களை, நடிகர்களை முன்னணிக்கு நகர்த்தி விட்ட அவர்களுடைய 'குட்' நிறுவனத்தின் 'குட் வில்' அவருக்கும் சீக்கிரமே கிடைக்க வாழ்த்துவோம். -
No comments: