விஜய் தான் 2016-இல் தமிழ்நாட்டோட முதல்வர்? : தொடர்ந்து விஜய்யின் பொறுமையை சோதிக்கும் ரசிகர்கள்!
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடிப்பதும், இனிப்பு கொடுத்து கோண்டாடுவதும் என விஜய் ரசிகர்களின் நடவடிக்கைகள் இன்னும் விட்டபாடில்லை.
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் ஜெயலலிதாவை திட்டியும், விஜய்க்கு சப்பொர்ட் செய்யும் கருத்துகளையும் எழுதி அவரை டென்ஷனாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்யின் படத்தைப் போட்டு ஒரு பரபரப்பான போஸ்டரை ஒட்டி அவருக்கு எரிச்சலை கிளப்பியிருக்கிறார்கள்.
அந்தப் போஸ்டரில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
vijay poster விஜய் தான் 2016 இல் தமிழ்நாட்டோட முதல்வர்? : தொடர்ந்து விஜய்யின் பொறுமையை சோதிக்கும் ரசிகர்கள்!
மேலும் அந்தப் போஸ்டரில், நன்றி நன்றி நன்றி தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று அதிரடியான வாசகங்களைப் போட்டுள்ளனர்.
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ரசிகர்களின் இந்த மாதிரியான அழிச்சாட்டியங்களை எல்லாம் விஜய் கை கட்டி வேடிக்கைப் பார்ப்பாரோ..?
No comments: