சென்னையில் நடிகர் விஜய்-க்கு சிலை: ஃபேஸ்புக் ரசிகர்கள் திறப்பு...
குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இன்று காலை திறக்கப்பட்டிருக்கும் விஜய் சிலை | ஃபேஸ்புக் பக்கம்
'கத்தி' படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலை ஒன்றை சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நிறுவி இருக்கிறார்கள்.
தீபாவளி அன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்தி' திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் நாளில் ரூ.23 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் மகிழ்ச்சியில், நடிகர் விஜய்க்கு சிலை ஒன்றினை நிறுவி இருக்கிறார்கள். தற்போது உள்ள தமிழ் திரையுலகில் நடிகர் ஒருவருக்கு தமிழ்நாட்டில் சிலை திறந்திருப்பது விஜய்க்கு மட்டுமே. இன்று காலை 11 மணியளவில் சென்னை - குரோம்பேட்டையில் இந்தச் சிலை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
நடிகர் விஜய் சிலையை உருவாக்க கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் 'Facebook Vijay Fans Club - FVFC' என்ற பக்கத்தினர் நிறுவி இருக்கிறார்கள். இந்தச் சிலை 'தலைவா' படத்தில் வரும் விஜய் கெட்டப் போன்று வடிவமைக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
No comments: