ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது
கடந்த சனிக்கிழமை அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதனை எதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை நாளையே விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாயிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்டார் அவர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனால் அக்டோபர் 7 ஆம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது , அதனால் அவர் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி பக்ரீத் , அது விடுமுறை தினம் என்பது குறிபிடத்தக்கது. -
No comments: