வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம். 1, 10, 19, 28 A, I, J, Q, Y
அதிர்ஷ்டமான காலகட்டமாக அமைந்திருக்கும்.
*வருமானம் பல வழியிலும் வந்து கொண்டிருக்கும்.
*சுபவிஷயத்தில் இருந்த தடைகள் நீங்கி விடும்.
*பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்
*வியாதி பறந்தோடும். ஆரோக்கியம் மேம்படும்.
*தொழிலதிபர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
*வியாபாரிகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருமானம் காண்பர்.
*பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.
*அரசியல்வாதிகள் தொண்டர்நலனில் அக்கறை செலுத்துவர்.
*விவசாயிகள் விளைபொருளை நல்ல விலைக்கு விற்பர்.
*பெண்கள் புகுந்த வீட்டினரால் பாராட்டப்படுவர்.
*மாணவர்கள் ஆசிரியர் பாராட்டும் விதத்தில் படிப்பர்.
2, 11, 20, 29 B, K, R
*அனைவரிடமும் இனிமையுடன் பேசிப் பழகுவீர்கள்.
*வருமானம் பன்மடங்கு உயரும். சேமிக்க வாய்ப்புண்டு.
*குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்திட இது ஏற்ற தருணம்.
*பெற்றோர் உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
*தொழிலதிபர்கள் லாப நோக்கில் திறம்பட செயல்படுவர்.
*வியாபாரிகள் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
*பணியாளர்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.
*அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படுவர்.
*விவசாயிகள் நவீன உழவுக்கருவி மூலம் பணியை மேம்படுத்துவர்.
*பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் விருப்பத்துடன் பங்கேற்பர்.
*மாணவர்கள் பெற்றோரின் அரவணைப்பை பெறுவர்.
3, 12, 21, 30 C, G, L, S
*நினைத்தது எல்லாம் படிப்படியாக நிறைவேறும்.
*வருமானம் அதிகரிக்கும். சேமிக்க இடமுண்டு.
*மனம் போல திருமண யோகம் கைகூடும்.
*உடல்நலம் திருப்தி அளிக்கும். கடமையில் ஆர்வம் கூடும்.
*தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கி லாபத்தை உயர்த்துவர்.
*வியாபாரிகள் அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.
*பணியாளர்கள் மேலதிகாரிகள் மத்தியில் நற்பெயர் காண்பர்.
*அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
*விவசாயிகள் நிலப்பிரச்னையிலிருந்து விடுபட்டு மகிழ்வர்.
*பெண்கள் கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.
*மாணவர்கள் கல்வியோடு விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவர்.
4, 13, 22, 31 D, M, T
*அதிர்ஷ்டவசமாக வருமானம் உயர யோகமுண்டு.
*உறவினர் ஒத்துழைப்புடன் சிறப்பாக சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
*அலர்ஜி சம்பந்தமான பிரச்னை தலைதுõக்கலாம் கவனம்.
*தொழிலதிபர்கள் தொழிலாளர் நலனில் அக்கறை கொள்வர்.
*வியாபாரிகள் புதிய வாடிக்கையாளரைக் கவர முயற்சிப்பர்.
*பணியாளர்கள் சுதந்திர உணர்வுடன் பணியாற்றி வருவர்.
*அரசியல்வாதிகள் தலைமை ஆதரவைப் பெற்று மகிழ்வர்.
*விவசாயிகள் கால்நடை வளர்ப்பால் வருமானம் காண்பர்.
*பெண்கள் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபட்டு வருவர்.
*மாணவர்கள் நல்ல நண்பர்களுடன் பழகி மகிழ்வர்.
5, 14, 23 E, H, N, X
*சமூக அந்தஸ்து மிக்கவராகத் திகழ்வீர்கள்.
*பொருளாதார சிரமம் படிப்படியாக நீங்கும். பழைய கடன் தொல்லை தீரும்.
*மனம் போல சுபநிகழ்ச்சியை நடத்திட முயல்வீர்கள்.
*உடல் நலம் குறித்த சிந்தனை மனதில் மேலோங்கும்.
*தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பணிகளில் அக்கறை செலுத்துவர்.
*வியாபாரிகள் வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் அடைவர்.
*பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை தாமதமின்றி கிடைக்கும்.
*அரசியல்வாதிகள் அரசியல் சூழலைசாதகமாக்கிக் கொள்வர்.
*விவசாயிகள் நல்ல மகசூலும், அதற்கேற்ப லாபமும் காண்பர்.
*பெண்கள் தாய்வழி உறவினர் ஆதரவைக் கண்டு மகிழ்வர்.
*மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.
6, 15, 24 U, V, W
*நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும்.
*பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பரச் செலவு கூடும்.
*மனம் போல மங்கல நிகழ்ச்சியை நடத்தி முடிப்பீர்கள்.
*உடல்நிலை சிறிது பாதிக்கப்படலாம், கவனம்.
*தொழிலதிபர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருமானம் குவிப்பர்.
*வியாபாரிகள் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்று நடப்பர்.
*பணியாளர்கள் பணிச்சுமையிலிருந்து விடுபட வாய்ப்புண்டாகும்.
*அரசியல்வாதிகள் அரசியல்ரீதியாக நீண்ட பயணம் மேற்கொள்வர்.
*விவசாயிகள் புதிய நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
*பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவர்.
*மாணவர்கள் நண்பர்களுடன் கூட்டாகப் படித்து முன்னேறுவர்.
7, 16, 25 O, Z
*அதிர்ஷ்டகரமாக முன்னேற வழி உண்டாகும்.
*பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவும் கூடும்.
*சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும்.
*உடல்பலத்தோடு மனதில் துணிச்சலும் நிலைத்திருக்கும்.
*தொழிலதிபர்கள் அமோக வளர்ச்சியைப் பெற்று மகிழ்வர்.
*வியாபாரிகள் விரிவாக்க முயற்சியில் கவனம் செலுத்துவர்.
*பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.
*அரசியல்வாதிகள் தொண்டர் மத்தியில் கவுரவத்துடன் திகழ்வர்.
*விவசாயிகள் புதிய உழவுக்கருவி மூலம் பணியை மேம்படுத்துவர்.
*பெண்கள் குடும்பத்தை உயிராக மதித்துப் போற்றுவர்.
*மாணவர்கள் ஆசிரியர் அறிவுரையை ஏற்று முன்னேறுவர்.
8, 17, 26 F, P
*திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
*வருமானம் அதிகரிப்பதால் கடன் தொல்லை தீரும்.
*சுபவிஷயத்தில் இருந்த தடங்கல்கள் அகலும்.
*பெற்றோர் உடல்நலனில் கவனம் செலுத்த நேரிடும்.
*தொழிலதிபர்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர்.
*வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவு கண்டு மகிழ்வர்.
பணியாளர்கள் சகபணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவர்.
*அரசியல்வாதிகள் தலைமையின் அன்பிற்கு உரியவராவர்.
*விவசாயிகள் கடன் பிரச்னையில் இருந்து விடுபடுவர்.
*பெண்கள் மனம் போல் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
*மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.
9, 18, 27
*வருமானம் திருப்தி அளிக்கும். தேவை நிறைவேறும்.
*உறவினர்களின் ஆதரவோடு சுபநிகழ்ச்சிநடந்தேறும்.
*உடல்நலன் குறித்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
*தொழிலதிபர்கள் அரசு வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.
*வியாபாரிகள் புதிய உத்தி மூலம் வாடிக்கையாளரை ஈர்ப்பர்.
*பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டாலும் ஆதாயமடைவர்.
*அரசியல்வாதிகள் பதவியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவர்.
*விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டுவர்.
*பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.
*மாணவர்கள் பெற்றோர் மகிழும் விதத்தில் படிப்பர்.
No comments: