Header Ads

குடிபோதையில் பெற்ற மகளையே கற்பழித்த தொழிலாளி கைது

மங்களூர் அருகே குடிபோதையில் பெற்ற மகளையே கற்பழித்ததாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி 

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே பஜ்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட கரும்பார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர்(வயது 47). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.

மனைவி இறந்துபோய் விட்டதால் சந்திர சேகர் அவரது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சந்திரசேகரின் வீட்டிற்கு அவருடைய மனைவியின் தங்கை வந்து சிறுமியை பார்த்து நலம் விசாரித்து செல்வார். மேலும் சந்திரசேகருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

17 வயது சிறுமி கற்பழிப்பு 

இந்த நிலையில், சந்திரசேகர் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது மதுகுடித்து போதையில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடிபோதையில் வீட்டில் தனியாக இருக்கும் 17 வயது சிறுமியை பெற்ற மகள் என்று கூட பாராமல் கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக அவர் சிறுமியை மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் சந்திரசேகரின் வீட்டின் அருகே உள்ள அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து மங்களூர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பஜ்பே போலீசார் உதவியுடன் சென்று சிறுமியை மீட்டு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

கைது 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பஜ்பே போலீசார் பெற்ற மகளையே கற்பழித்ததாக கூறப்படும் சந்திர சேகரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Powered by Blogger.