நள்ளிரவில் நண்பர்களுடன் அஞ்சலி போட்ட குத்தாட்டம்
தமிழ் படங்களில் அறிமுகமான அஞ்சலி, கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். கலகலப்பு படத்தில் கவர்ச்சியும் காட்டினார். எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தபடி அவர் கேரியர் சென்று கொண்டிருக்கும்போது அதன் திருப்பமாக சித்தி பாரதிதேவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். பாரதி தேவியின் நண்பரான களஞ்சியம் படத்தில் நடிக்க மறுத்தார். இது தொடர்பான வழக்குகள் நடந்து வருகிறது.
சில மாதங்கள் வரை தலைமறைவாக இருந்தவர் இப்போது தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் தமிழ் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். அஞ்சலி தெலுங்கில் உள்ள ஒரு பிரபலமான பைனான்சியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சீனியர் நடிகர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வாரிசு தயாரிப்பாளர் அவருக்கு உதவுவதாகவும் செய்திகள் உலவிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அஞ்சலி, ஐதராபாத் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒரு வி.ஜ.பியின் பிறந்நாள் பார்ட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவு வரை ஆட்டம்போட்டிருக்கும் படங்கள் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த படங்களில் அவர் தன்னை மறந்து ஆடுவதும், யார் யாருக்கோ கேக் ஊட்டுவதுமான படங்கள் வெளிவந்திருக்கிறது.
No comments: