Header Ads

ரஜினி ரசித்த முண்டாசுப்பட்டி

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார்.

படத்தைப் பார்த்த பின், 'முண்டாசுப்பட்டி' தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார்.



படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டினார், குறிப்பாக முனீஷ் காந்த் கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாகக் கூறினார். 

படத்தின் இயக்குனர் ராம் குமார், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார்.

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி வி குமார் இவர்களுக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.