நடிகை அனுஷ்கா சர்மாவை கழட்டி விட்டு இலியானாவுடன் ஊர் சுற்றும் வீராத் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் வீராத் கோலி. இவர், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது அனுஷ்கா இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரபரப்பாகப் பரவின. வெளிநாட்டில் மட்டுமின்றி, உள்நாட்டிலும் மும்பையில் உள்ள அனுஷ்காவின் வீட்டுக்கு கோலி செல்லும் அளவுக்கு விஷயம் முற்றிவிட்டது. ஐ.பி.எல். தொடக்க விழாவில் கூட ஷாரூக்கான் நடத்திய சுயம்வரம் விளையாட்டில், அனுஷ்காவின் படத்தைத் தேர்வு செய்த கோலி, தங்களுக்கு இடையே உள்ள காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில் கோலியின் பார்வை, இன்னொரு நடிகையான இலியானா பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது தெலுங்கு நடிகை இலியானாவுடன் நட்பு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு ஷாம்பூ விளம்பரப் படத்தில் தெலுங்கு இலியானாவுடன் கோலி இணைந்து நடித்தார். அந்தச் சமயம்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாம். தற்போது கோலி- இலியானா ஜோடியை பல இடங்களில் காண முடிகிறது என்கிறார்கள். வழக்கம்போல இத்தகவலையும் விராட் கோலி மறுக்கவோ, ஏற்கவோ இல்லை.
No comments: