அஜித் - சமந்தா - ராணா... அஜித்தின் அடுத்த பட அப்டேட்!
சிறுத்தை', 'வீரம்' படங்களை இயக்கியவர் சிவா. அடுத்த படத்தை அஜித்தை வைத்து இயக்க உள்ளார். சிவா தற்போது அஜித் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. வித்யாபாலன் தான் ஹீரோயின் என்பதில் உண்மை இல்லையாம். சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனை இருக்கிறதாம்.
சிவா இயக்கும் படங்களுக்கு எப்போதும் தெலுங்கில் மவுசு இருக்கிறது. இதனால் தன் மூன்றாவது படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
தெலுங்கு மார்க்கெட்டையும் தக்கவைத்துக் கொள்வதற்காக ராணாவும் அஜித்துடன் நடிக்க இருக்கிறார். 'ஆரம்பம்' படத்தில் அஜித்தும், ராணாவும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
No comments: