பிரேசில் கால்பந்து வீரரை ஒப்பிட்டு நடிகர் தனுஷை புகழ்ந்த அமிதாபச்சன்
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனுடன் நடிகர் தனுஷ் சமிதாஇ என்ர இந்திபடத்தில் நடித்து வருகிறார்.இந்தபடத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் செய்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஆர்.பால்கி இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே அமிதாப்பச்சன் நடிப்பில் "பா" மற்றும் சீனுகாம் ஆகிய படங்களை இயக்கிவர்.
இந்தபடம் குறித்து அமிதாபச்சன் தனது டுவிட்டர் தளத்தில் கால்பந்து போட்டிகளில் நெய்மர் எப்படி ஒரே போட்டியில் உலகப்புகழ் பெற்றாரோ அதுபோன்று நடிகர் தனுஷ் ஒரே படத்தில் இந்தியா முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனுஷ் தேசிய விருது வாங்கி புகழ்பெற்றிருந்தாலும், அவரது புகழ் தற்போது தன்னுடன் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படமான சமிதாப் என்ற படம் ரிலீஸ் ஆனால், இந்தியா முழுவதும் பரவி விடும் என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சவுத் நெய்மர் என தனுஷை புகழ்ந்து உள்ளார்.
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் போட்டியில் பிரேசில் அணி குரோஷியா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் மிக அபாரமாக இரண்டு கோல் அடித்து பிரேசில் அணியின் வெற்றிக்கு வித்திட்டார் கால்பந்து சூப்பர் ஸ்டார் நெய்மர் . உலகக்கோப்பைக்கு முன்னரே அவர் பிரபலம் அடைந்திருந்தாலும், இந்த போட்டிக்கு பின்னர் நெய்மர் உலகப்புகழ் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
No comments: