ஆஃப் த ரெக்கார்டு!
விரல் நடிகரை வைத்துப் படம் இயக்கும் எண்ணத்தை மூட்டை கட்டிவிட்டாராம் ஒல்லி நடிகரின் அண்ணன் இயக்குநர். 'கதை முழுசா சொல்லணும்’ என்று நடிகர் கண்டிஷன் போட்டதுதான் காரணமாம்!
வாக்கிங் நடிகரின் படத்தில் இன்னொரு நாயகியாக வெள்ளைக்காரப் பெண்ணை ஒப்பந்தம் செய்யும் நேரத்தில் நம்பர் நடிகை புத்த இயக்குநருக்கு பார்ட்டி வைத்து வாய்ப்பை 'கப்’ என பிடித்தாராம்!
கலர் பேக் படத்தின் முதல் நாள் வசூல், உச்ச நடிகரின் கார்ட்டூன் படத்தின் முதல் நாள் வசூலை நெருங்கிய சந்தோஷத்தை பார்ட்டி வைத்துக் கொண்டாடியிருக்கிறார் களவாணி நடிகர்!
'இவர் படத்தை ஏன்டா ஒத்துக்கிட்டோம்?’ என புலம்பிக்கொண்டிருக்கிறார் அட்டைப்பட இயக்குநர். இந்தப் பேர் வேணாம், அந்தப் பேர் வேணாம். என அடுத்தடுத்து மூன்று பெயர்களைப் படத்துக்கு மாற்றியவர், தற்போது கடைசியாக வைத்த பெயரையும் 'நல்லாவா இருக்கு இது?’ என வறுத்தெடுக்கிறாராம் தம்பி நடிகர்!
தொடர்ச்சியாக இரு படங்களும் 'ஃப்ளாப்’ ஆக, வாரிசு நடிகரை வைத்து படம் எடுத்துவரும் கம்பெனிகள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றன!
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஸ்வீட் ஸ்டால் நடிகை மும்பை நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்குப் போவாராம். சென்ற சனிக்கிழமை இரவு பார்ட்டி பெரும் ரகளையில் முடிந்ததாம். போலீஸுக்கு நிறைய கரன்சி தந்து கப்சிப் என முடித்தாராம்!
No comments: