விஜய் பிறந்தநாள் விழா ஆரம்பம்! இயக்குனர் ஸ்பெஷல்!
தமிழ் சினிமாவில் என்றும் இயக்குனருக்கு பிடித்த நடிகர் என்றால் அது ‘இளைய தளபதி’ விஜய் தான். ஏனென்றால் நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தவர். ஆனால் இன்று விஜய் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் கண்டிப்பாக அதில் பல இயக்குனர்கள் உள்ளனர். அவர்களை பற்றிய சிறிய தொகுப்பு தான் இந்த பகுதி.இந்த வகையில் நாம் முதலில் பார்ப்பது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தான். விஜய் இன்று ஆலமரமாக நிற்கிறார் என்றால் அதற்கு வேராக இருந்தவர் இவர் தான். இவர் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்த விஜய்க்கு முதன் முதலாக மெகா ஹிட் படம் கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.இவர் இயக்கிய ‘பூவே உனக்காக’ படம் தான் விஜய்யை தமிழக குடும்பங்களில் ஒரு நபராக கொண்டு சென்றது, இதை அவரே பல மேடைகளில் சொல்லியுள்ளார். இதை தொடர்ந்து இவரை காதல் நாயகனாக பல பெண்களின் மனதில் கொண்டு சென்ற படம் ‘காதலுக்கு மரியாதை’ இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கினார்.இது மட்டுமில்லாமல் இயக்குனர் செல்வபாரதி இயக்கிய ‘ நினைத்தேன் வந்தாய்’, பிரியமானவளே’ போன்ற படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்கள்.இதுவரை காதல், செண்டிமேண்ட் என சென்று கொண்டிருந்த விஜய் கிராஃபை மாற்றியவர் தான் இயக்குனர் ரமணா. இவர் இயக்கிய ‘திருமலை’ விஜய்யின் ஆக்ஸன் அவதாரத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதற்கு பிறகு இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி வாகையை சூடியது.அதிலும் குறிப்பாக இயக்குனர் பேரரசு இயக்கிய ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ போன்ற படங்கள் இவரை ஆக்ஸன் உச்சத்திற்கே கொண்டு சென்றது, மேலும் இவரின் ரசிகர் வட்டாரம் அதிகரித்ததும் இந்த சமயத்தில் தான். விஜய்யின் திரையுலக வாழ்க்கையை ஒரு படி மேலே கொண்டு சென்ற படம் ‘கில்லி’,இப்படத்தை கமர்ஷியல் கிங் தரணி இயக்கினார். இப்படம் இவரை வசூல் சக்கரவர்த்தியாக காட்டியது. இவை அனைத்திற்கும் மேலாக முன்னணி இயக்குனர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் இவரை இந்திய அளவில் வசூல் மன்னனாக கொண்டு வந்தது.இதுபோல் விஜய்யின் ஒவ்வொரு வெற்றிக்கும் தூணாக இருந்த இயக்குனர்களுக்கு ‘சினி உலகம்’ சார்பாக பாராட்டுகள்.
No comments: