மீண்டும் நடிப்பு கோதாவில் இறங்கிய இன்ஷியல் நடிகர்!
தமிழ் சினிமாவில் திடீரென நுழைந்து கரன்சி நோட்டுகளை வீசி அரச வைத்தவர் அந்த இன்ஷியல் நடிகர். திடீரென அரசியலுக்குள் நுழைந்து பாராளுமன்றம் வரை சென்று அப்படியே யூ டேர்ன் அடித்து, சேர்ந்த கட்சிக்கும் முழுக்குபோட்டுவிட்டு இலைகட்சியில் அட்டனன்ஸ் போட்டுவிட்ட நேராக சினிமாவுக்கு வந்துவிட்டார்.
சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் கரன்சியை கோணிப் பையில் கட்டிக்கொண்டு கோடம்பாக்கத்தில் வலம் வருகிறார். பத்து கோடி பட்ஜெட், இரண்டு மாதத்தில் படம். ஆக்ஷன் ஸ்டோரி என்று பட்டியல் போட்டு வாய்ப்பு தேடுகிறாராம். இதனால் கோடம்பாக்கத்து டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருந்த அசிஸ்டெண்ட் டைரக்டருங்கல்லாம் சுறுசுறுப்பாகி நடிகரைத் தேடி அலை அலையாய் படை எடுத்துக்கிட்டிருக்காங்களாம்.
No comments: