Header Ads

இந்தோனேசியா பெண்ணுக்கு பல்லி பிறந்தது என்ற இணையதள தகவலால் பரபரப்பு

இதோனேசியாவில் இளம்பெண் ஒருவர் பிரசவத்தின்போது குழந்தைக்கு பதிலாக பல்லியை பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மாந்திரீகம் செய்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதி மக்கள் தாக்கவும் சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவிலுள்ள ஒயினுண்டோ கிராமத்தை டெபி நுபாடோனிஸ் (வயது31) என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். மிகவும் குக்கிராமமான அங்கு எந்த மருத்துவமனை வசதியும் கிடையாது. டெபி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு கடந்த மே மாதம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கிராமத்தை சேர்ந்த மருத்துவச்சி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். வலியில் அலறிதுடித்த டெபிக்கு கடைசியாக பல்லி ஒன்று பிறந்ததாக மருத்துவச்சி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. அதனை யாராலும் நம்பமுடியவில்லை. அனைவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில் அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மாந்திரீகம் செய்து விட்டதாக கும்பல் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் மெல்ல வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் இணைய தளத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். இது மிகவும் முட்டாள்தனமானது என்று கூறியுள்ளனர்.

பெண் ஒருவருக்கு பல்லி குழந்தையாக பிறக்க வாய்ப்பேயில்லை. இவ்வாறு கூறுவது மிகவும் முட்டாள் தனமான ஒன்று. ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுக்க சாத்தியமேயில்லை. இதுவரை அப்படி நடந்ததாக மருத்துவ வரலாற்றிலும் தகவல்கள் இல்லை. என்று அப்பகுதியை சேர்ந்த மருத்துவர் மெஸ்ஸி கூறியுள்ளார். மேலும் உண்மையை அறிய கிராமத்திற்கு குழு அனுப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பான அறிக்கை வெளியான பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று மெஸ்ஸி கூறியுள்ளார். 

மேலும், அக்கிராம மக்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது டெபிக்கு கர்ப்பிணிக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்ததாகவும், பிரசவ வலி ஏற்பட்டதும் உண்மை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், டெபிக்கு பொய் கர்ப்பம் உண்டாகியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார் மெஸ்சி. பொய்யாக கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நிஜ கர்ப்பிணிகளை போன்றே அனைத்து பிரச்சனைகளும் உண்டாகும். கர்ப்பிணியாக இருப்பது போன்றே உணர்வார்கள். மாதங்கள் செல்ல செல்ல அவர்களது கர்ப்பப்பையும் விரிவடைந்து வயிறு பெரிதாகும். 

உண்மையான பிரசவ வலி போன்றே அவர்களுக்கு வலி வரலாம். அப்போது பிரசவத்தின் போது ஏற்படுவது போன்ற ரத்தப்போக்கும் உண்டாகலாம். மிகவும் சுகாதாரமற்ற அந்த இடத்தில் தற்செயலாக பல்லி வந்திருக்க வேண்டும். அதனை டெபிக்கு பிறந்ததாக மருத்துவச்சி தவறுதலாக புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று மெஸ்ஸி கூறியுள்ளார். 

No comments:

Powered by Blogger.