சமந்தாவின் சர்ச்சை பட போஸ்டர்: ரசிகர்கள் எதிர்ப்பு
பெண் காலை ஆண் தொடுவது போல் வெளியான சமந்தாவின் சர்ச்சை ஸ்டில்லுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமந்தா ஏற்கனவே இது போன்று வெளியான ஒரு தெலுங்கு பட போஸ்டரை கண்டித்தார். மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் கடற்கரை யோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் ஒரு பெண் கைகளை ஊற்றி நாய் போன்று தொடர்வது போன்றும் அப்படம் இருந்தது. இந்த போஸ்டர் பெண்களை இழிவு படுத்தவது போல் உள்ளது என்று சமந்தா கண்டித்தார். இது மகேஷ்பாபுவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சமந்தாவுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டனர்.
அதே சமந்தா தற்போது ஒரு ஆண் தனது காலை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மகேஷ்பாபு ரசிகர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த காட்சி அஞ்சான் படத்தில் இடம் பெற்று உள்ளது. கடற்கரையில் சமந்தா கவர்ச்சியாக படுத்து இருப்பது போன்றும் அவரது கால்களை சூர்யா தொட்டுக் கொண்டு இருப்பது போன்றும் இதை எடுத்து உள்ளனர். இந்த படத்தை பார்த்து தான் மகேஷ்பாபு ரசிகர்கள் கோபமாகியுள்ளார்கள். மகேஷ்பாபு படத்தில் பெண்ணை கேவலப்படுத்தியதாக சொன்னவர் அஞ்சான் படத்தில் ஆண்களை கேவலப்படுத்துவது போன்ற காட்சியில் நடித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
No comments: