இதப்படிங்க முதல்ல...
தீபாவளிக்கு மூன்று மெகா படங்கள்!
கடந்த பொங்கலுக்கு விஜய்யின், ஜில்லா, அஜீத்தின், வீரம் படங்கள் வெளியாகி பரபரப்பு கூட்டின. இந்நிலையில், வரவிருக்கும் தீபாவளிக்கு, ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த போட்டி கோதாவில் அஜீத்தின், 55வது படமான, சத்யாவையும் இறக்கிவிட வேண்டும் என்ற முயற்சியும் நடக்கிறது. ஆனபோதும், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனன், இன்னும் இதுகுறித்து உறுதிப்படுத்தவில்லை. ஆக ரஜினி, விஜய், விஷால் நடிக்கும் மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாவது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
— சினிமா பொன்னையா
சந்தானத்துக்கு இரண்டு ஜோடி!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில், கதாநாயகனாக நடித்த சந்தானம், தற்போது லிங்காவில் ரஜினியுடன் காமெடியனாக நடித்து வருகிறார். அப்படம் முடிந்ததும் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். குறும்பட இயக்குனர் ஒருவர் இயக்கும் அப்படத்தில், சந்தானத்துக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகாசிங்; இன்னொருவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி. இவர்கள் இருவருடனும், கிளுகிளுப்பு காட்சிகளில் புகுந்து விளையாட இருக்கிறார் சந்தானம்.
— சி.பொ.,
டப்பிங் பேசும் அனுஷ்கா - நயன்தாரா!
நயன்தாரா, அனுஷ்கா இருவரும் நடிக்க வந்து, பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இருப்பினும், இதுவரை எந்த படத்திலும், அவர்கள், 'டப்பிங்' பேசியதில்லை. இந்நிலையில், அஜீத்துடன் தான் நடிக்கும், சத்யா படத்திற்காக முதன் முறையாக, தனக்குத்தானே, 'டப்பிங்' பேசுகிறார் அனுஷ்கா. அவரைத் தொடர்ந்து, சிம்பு - நயன்தாரா நடிக்கும், இது நம்ம ஆளு படத்தை இயக்கும் பாண்டிராஜ், நயன்தாராவிடம், 'டப்பிங்' பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், அனுஷ்காவைப் போலவே, தற்போது நயன்தாராவும் தமிழை தங்குதடையின்றி பேச, தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். குடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார்.
— எலீசா
ஒரு கோடி கேட்கும் லட்சுமி மேனன்!
விஷாலுடன் நான் சிகப்பு மனிதன் படத்தில், உதட்டோடு உதடு முத்தக் காட்சியில் நடித்த பின், லட்சுமி மேனனின் சினிமா மார்க்கெட் எகிறி விட்டது. அவரையும், கமர்ஷியல் நடிகை பட்டியலில் சேர்த்து விட்டதால், புதிய படங்களுக்கு, அவரை, ஒப்பந்தம் செய்ய படாதிபதிகள் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று, உயர்த்தினர். அதனால், இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட லட்சுமி மேனன், தற்போது, 50 லட்சத்தில் இருந்து, ஒரு கோடிக்கு தாவி விட்டார். படாதிபதிகள், 'ரொம்ப அதிகமாக இருக்கே...' என்று தலையை சொறிந்தால், 'தேவைப்பட்டால், கிளாமர், முத்தக் காட்சிகளில் தாராளமாக நடித்துத் தருகிறேன்...' என்று சொல்லி, அவர்களை மேற்கொண்டு பேச விடாமல் செய்து வருகிறார் நடிகை. கொடுக்கிறதை கொடுத்தால் குடம் கொண்டு தண்ணீருக்குப் போவாள்!
— எலீசா
முழுநேர ஹீரோவாகும் விஜய் ஆண்டனி!
'நாக்க முக்க' என்ற பாடல் மூலம், பிரபலமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் ஹீரோவான அவர், தற்போது, சலீம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், இதையடுத்து, இந்தியா பாகிஸ்தான், திருடன், மற்றும் சைத்தான் எனப் பலப் படங்களில், வரிசையாக நடிக்க உள்ளார். இதன் காரணமாக, இனி இசையமைக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, தனக்கென ஒரு இடம்பிடிப்பதே, தன்னுடைய நோக்கம் என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
மதம் மாறிவிட்டதாக எழுந்த செய்திக்கு, மறுப்பு சொன்ன ஜெயமான இரண்டெழுத்து நடிகர், இப்போது மசூதிக்கு சென்று தொழுகை நடத்தி வருகிறார். அதோடு, தன் பெயரை. ரஹ்மத்துல்லா என்று மாற்றியுள்ளார். ஆனால், தற்போதைக்கு, இதை ரகசியமாக வைத்துள்ளார் நடிகர்.
த தர்ட்டி பிக்சர்ஸ் நடிகையின் கணவர், தற்போது ஒரு இளவட்ட இந்தி நடிகையுடன் நட்பு என்ற பெயரில், உறவாடி வருகிறார். அதனால் இது எந்த மாதிரியான உறவு என்பதை அறிய நினைத்த மேற்படி நடிகை, கணவரை ரகசியமாக உளவு பார்த்து வருகிறார்.
No comments: