தமிழ் சினிமாவில் அஜீத்தும், கெளதம்மேனனும்தான் என் பேவரிட்!
ஹன்சிகா, லட்சுமிமேனன் உள்ளிட்ட சில புதுமுக நடிகைகளின் வருகையினால் சீராக சென்று கொண்டிருந்த த்ரிஷாவின் மார்க்கெட் தேக்கம் கண்டுள்ளது. இருப்பினும், தமிழில் பூலோகம் படத்தில் மட்டுமே நடித்த அவர், அதையடுத்து மலையாள படங்களில் நடிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருநது அங்குள்ள முன்னணி டைரக்டர்களை சந்தித்து வந்தார்.
அப்போதுதான், அஜீத்தைக்கொண்டு தான் இயக்கும் படத்திற்காக த்ரிஷாவுக்கு அழைப்பு விடுத்தார் கெளதம்மேனன். இதனால் சந்தோசத்தில் எகிறிகுதித்த த்ரிஷா, கேரளாவை காலி பண்ணி விட்டு சென்னைக்கு ஓடோடி வந்து அந்த படத்தில் கமிட்டானார். அதோடு, அதே படத்தில் அனுஷ்காவும் அஜீத்துக்கு ஒரு ஜோடி என்றபோதும், தன்னைச்சுற்றியே கதையோட்டம் இருந்ததால் இன்னும் உற்சாகமடைந்தார் த்ரிஷா.
அதனால், அப்படத்துக்காக கேட்ட தேதிகளை வாரி வழங்கிய த்ரிஷா, இப்போது தமிழ் சினிமாவில் எனது பேவரிட் அஜீத், கெளதம்மேனன் இருவரும்தான் என்று கூறி வருகிறார். என்னைப்போன்ற திறமையான ஆர்ட்டிஸ்டுக்கு எந்த மாதிரி கேரக்டர் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர்கள். அதனால்தான், மற்ற இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தர தயங்கும் நிலையில், இவர்களோ அஜீத்தின் 55வது படத்தில் எனக்கு பவர்புல் வேடம் தந்துள்ளனர்.
அந்த வகையில் இந்த படத்தில் நடித்திருப்பதால், இதற்கு முன்பு கெளதம்மேனன் இயக்கத்தில் நான் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் போன்று இந்த படமும் மெகா ஹிட்டாகும் என்பது உறுதி என்று கோலிவுட் வட்டாரங்களில் அதிக நம்பிக்கையை வெளியிட்டு வருகிறார் த்ரிஷா.
No comments: