அஜித்தை அதிா்ச்சியில் தள்ளிய பிரதமா் :
வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இதில் இரு வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர்.
கௌதம் மேனன் படம் என்றாலே காதல் காட்சிக்கு குறைவே இருக்காது. அப்படிபட்ட காதல் காட்சிகளை படமாக்க மலேசியா சென்றது படக்குழு. #அஜித், #அனுஷ்கா சம்மந்தபட்ட காதல் காட்சிகளை மலேசியாவில் படம்பிடித்துள்ளனர். மலேசியாவில் அஜித்துக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எனவே, படப்பிடிப்பு தளத்தில் அவரை நோில் காண பல ரசிகர்கள் வந்தார்களாம்.
மலேசிய ரசிகர்களுடன் சோ்ந்து நின்று தல பொறுமையாக புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். இது மட்டும் இல்லகோங்க! மேலும் மலேசியா பிரதமர், தன்னுடைய அலுவலகத்திலிருந்து வந்து நேரில் சென்று வரவேற்று படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளனர்.
இது அல்லவா மரியாதை!
No comments: