மன்னிச்சுடுங்க...! இனி இப்படி நடிக்க மாட்டேன் - அருந்ததி!!
எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் வெளுத்துக்கட்டு படம் மூலம் அறிமுகமான அருந்ததி, சமீபத்தில் வெளிவந்த, நேற்று இன்று படம் மூலம் கவர்ச்சி மழை பொழிந்துள்ளார். படத்தில் பல காட்சிகள் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளன. படத்தில் பிரசன்னா, விமல், ரிச்சர்ட், நர்த்தகி உட்பட பல நட்சத்திர கூட்டங்கள் உண்டு. அப்படி சில காட்சிகளில் நடித்த அருந்ததியிடம் நாம் கேட்ட சூடான கேள்விகளும், அவரின் முகம் சுளிக்காத பதில்களும் இதோ...
* நேற்று இன்று படத்தை எந்த தைரியத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள், முதலிலேயே இயக்குனர் முழு கதையும் சொன்னாரா...?
ஆரம்பத்திலேயே இயக்குனர் என்னிடம் முழு கதையையும் சொன்னார். கிளைமாக்சில் நான் தான் முக்கிய கேரக்டர் என்றார். கிளாமர் கொஞ்சம் இருக்கும் என்றார், நானும் மென்டலியாக தயாராகினேன். ஆனால் இவ்ளோ கிளாமரா வெளிபடுத்துவார்னு தெரியல, எனக்கும் கூச்சம் இருந்தது.
* அந்த ஒரு பனியனிலே படம் முழுக்க வர்றீங்களே?
கதை காடு பகுதியிலே நடக்குது, அங்கே காஸ்ட்யும் ஏதும் வசதி இல்லையே, பின் எப்படி நான் உடைகளை மாத்தி கேட்க முடியும். இரண்டாவது நான் நடிக்க வந்துட்டேன், இயக்குனர் சொல்வதை கேட்டுதானே ஆகணும்.
* தமிழ் சினிமாவுல காண்டமை தைரியமா எடுத்து கொடுத்த பெண் நடிகை நீங்களாதான் இருக்கும் போல, அந்த சீனில் நடிக்கும் போது, உங்களுக்கே இது அதிகமாக தெரியலையா.?
உண்மையை சொல்லணும்னா அந்த சீன் எடுக்கும் போது கொஞ்சம் கஷ்டப்பட்டேன். என் அப்பா தான் என்னோட ஷூட்டிங் வந்தார். இந்த காட்சியை எடுக்கும் போது அப்பா பார்த்தா சங்கடப்படுவார்னு, ஹோட்டலிலேயே இருக்க சொல்லிட்டேன். என்னை பொறுத்தவரை எப்படியாவது எனக்கு ஒரு வெற்றி வேணும். எதையாவது செய்து நான் நடிக்கும் படம் பெருசா வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் நடிக்கிறேன். சுருக்கமாக சொன்னால் ஒரு வெற்றிக்கான போராட்டம் தான் இது.
* வெற்றிக்கான போராட்டம் இப்படி தான் இருக்கணுமா, ஆற்றில் குளிக்கும் காட்சியில், கிட்டத்தட்ட அரை நிர்வாணம் போன்று இப்படிதான் கவர்ச்சியை தாண்டி நடிக்கணுமா என்ன...?
நிஜமாக சொல்கிறேன் இந்த சீனை நீங்க நல்லா பாருங்க, நான் அழுதது தெரியும். அப்படி ஒரு காட்சியில் நடிக்க சொல்லி கொடுத்ததே இயக்குனர் தான். நடித்த உடனே மானிட்டரில் போய் பார்த்தேன், ஆனால் அவ்வளவு அசிங்கமாக தெரியல, பெரிய திரையில பார்த்தபோது தான் நானே அசிங்கப்பட்டேன்... மன்னித்து விடுங்கள், இனி இது போல நடிக்க மாட்டேன். அப்படி நடித்தது என் தப்பு, ஆனால் அப்படி நடிக்க சொன்னது இயக்குனர். அவர் சொன்னதை நடிகையாக நான் செய்திருக்கிறேன்.
* குடும்ப பெண்ணாக நடித்த நீங்கள்... இப்படி படுக்கையறை காட்சியை பற்றி பேசுவதும், ஆபாச நாயகியாக மாறியதற்கும் யார் காரணம்..?
கவர்ச்சியாக நடித்தால் நிறைய ரசிகர்கள் கிடைப்பாங்க, நிறைய படம் கிடைக்கும், நல்ல மணி கிடைக்கும்னு நடிக்கல, அந்த கதைக்கு அந்த கவர்ச்சி தேவைப்பட்டது. அந்த சூழல் அது மாதிரி இருந்தது. எப்பவும் நான் ஹோம்லி ரோல் நடிக்கவே ஆசப்படுகிறேன். இந்த மாதிரி ரோல் நடிக்க எந்த பொண்ணும் கஷ்டப்படுவாங்க தான், நான் என்னை கொஞ்சம் தயார்படுத்திகிட்டேன். இயக்குனருக்கு மரியாதை தந்தேன், அவர் நினைத்தததை நான் நடிச்சேன் அவ்ளோதான்.
* படத்தை பார்த்தவங்க உங்க நடிப்பை பார்த்து என்ன சொன்னாங்க..?
ரொம்ப தைரியமாக, போல்டாக நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க, சிலர் கொஞ்சம் சரியாக நடி என்று சொன்னாங்க. இனி கண்டிப்பாக நல்லா யோசித்து நடிப்பேன். இப்போ யூனிட்டில் கேள்வி கேட்கும் அளவுக்கு பக்குவபட்டிருக்கேன்.
* படிப்புக்கும், நடிப்புக்கும் சம்பந்தம் இருக்கா...?
நிச்சயமாக இல்லை. பிறந்தது ஆந்திரா, வளர்ந்தது பெங்களூர், படிச்சது ஏர்ஹோஸ்டர்ஸ். படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டேன். என் விதியை நானே நிர்மாணித்து கொண்டேன். கடவுள் இந்த துறையில் நான் கஷ்டப்படணும் என்று எழுதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும். ஜெயிக்க தான் போராடுகிறேன், நேரம் வரும் பாக்கலாம்.
* இப்போ கையில் எத்தனை படங்கள் இருக்கு...?
கன்னடத்தில் 3 படங்கள் நடிச்சிட்டேன், தமிழில் தொட்டால் தொடரும், நாய்கள் ஜாக்கிரதை, சரவண பொய்கை இப்படி சில படங்கள் எல்லாமே ஹோம்லி ரோல் தான். நேற்று இன்று படத்தில் நடித்த அருந்ததியா இதுன்னு கேட்பீங்க. இனி நீங்கள் என்னை அரைகின்ற மாதிரி கேள்வி கேட்காமல் ஆச்சர்யபடுகிற மாதிரி படங்களில் நடிப்பேன்னு உறுதியாக
சொல்கிறேன். மீண்டும் ஒருமுறை மக்கள் என்னை மன்னிக்கணும்.
No comments: