நிஜத்தில் வென்றவர்
சரியா, தவறா? உண்மையா, பொய்யா? இருக்குமா, இருக்காதா? என்பது போன்ற ஏகப்பட்ட ஐயங்களை கிளப்பிவிட்டிருக்கிறது ஒரு கிசுகிசுப்பு. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே முன்னணி வார இதழில் வெளிவந்த கருத்துக்கணிப்புக்கு எதிர்ப்பும் ஆதரவுமான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுக்கு பொருத்தமான ஆளுதான் அவர் என்று ஒரு குரூப்பும், ரஜினியே ரிட்டையர் ஆகல. அதற்குள் எதுக்குப்பா இந்த விவாதம் என்று இன்னொரு குரூப்பும் மல்லுக்கு நிற்க, கடந்த பல படங்களாகவே தோல்வி முகத்திலிருக்கும் விஜய்யை விட, இந்த பட்டத்திற்கு பொருத்தமானவர் அஜீத்துதான். அவருக்குதான் நாடு முழுக்க ஒரு பெரிய ஆதரவு அலை இருக்கு. இந்த கருத்து கணிப்பில் அவரது பெயர் எப்படி முதலிடத்தில் வராமல் போனது என்று இன்னொரு குரூப்பும் மூக்கை நுழைத்து முடிந்தவரை போராடிக் கொண்டிருக்கிறது. நடுவில் நாம் கேட்ட தகவல் ஒன்று பகீர் ரகம்.
இந்த கருத்து கணிப்பில் சென்ற இடத்திலெல்லாம் அஜீத் பெயரைதான் முன் மொழிந்தார்களாம் ரசிகர்கள். அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான் என்று ரசிகர்கள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. விஜய்யை விட ஒன்றரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னாலிருந்தாராம் அஜீத். ஆனால் மீடியாக்களை விட்டுவிட்டு எப்பவுமே தள்ளி நிற்கும் அஜீத்திடம் இந்த தகவலை தெரிவிக்க முடியாமலே போனதாக கூறப்படுகிறது. யார் பேட்டி கேட்டாலும் கொடுப்பதில்லை. எந்த பத்திரிகையாளர் பேச முன் வந்தாலும், ‘என் மேனேஜர்ட்ட பேசுங்க’ என்று அஜீத் கட் பண்ணி விடுவதாலும் இந்த சந்தோஷ தகவலை அவருக்கு சொல்ல முடியாமலே போனதாக கிசுகிசுக்கிறார்கள்.
ஒருவேளை அவருக்குதான் வெற்றி என்று கூறியிருந்தாலும், அஜீத்தின் ரீயாக்ஷன் பெரிசாக இருந்திருக்கப் போவதில்லை. அப்புறம் எதுக்கு அவருக்கு கொடுக்கணும் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் கடந்த மூன்று தலைமுறையாக தமிழனின் இதயத்தில் குடியிருக்கும் ஒரு பத்திரிகை இப்படி நடந்து கொள்ள வாய்ப்பிருக்காது என்பதால், இந்த கிசுகிசுப்பை கிசுகிசுப்பு லெவலிலேயே விட்டுவிட வேண்டியதுதான்!
No comments: