பேஸ்புக் காதல் விபரீதத்தில் முடிந்தது: கல்லூரி மாணவி கற்பழிப்பு காதலன் கைது
பேஸ் புக்‘ மூலம் மலர்ந்த காதலால் கல்லூரி மாணவி வெளியே அழைத்து செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து காதலன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
‘பேஸ்புக்‘ காதல்
பெங்களூரை சேர்ந்தவர் சுவாதி(வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ‘பேஸ்புக்‘ (முகநூல்) மூலம் அபிசேக் என்பவர் பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 15–ந் தேதி இரவு சுவாதியை, அபிசேக் காரில் வெளியே சென்று வரலாம் என அழைத்துள்ளார். சுவாதியும் அபிசேக் உடன் சென்றுள்ளார். அப்போது காரை அபிசேகின் நண்பர் ராஜூ ஓட்டியுள்ளார்.
மாணவி கற்பழிப்பு
இந்த நிலையில், தலஹட்டாபுராவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தினர். பின்னர், அபிசேக்கும், ராஜுவும் மது குடித்துவிட்டு, சுவாதிக்கும் வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி உள்ளனர். போதை தலைக்கேறிய இருவரும் சுவாதியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். இரவு முழுக்க இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
பின்னர் மறுநாள் (நேற்று ) காலை பேட்ராயனபுரா அருகே சுவாதியை காரில் இருந்து இறக்கி விட்டு தலைமறைவாயினர்.
போலீசில் புகார்
அரை மயக்கத்தில், அலங்கோல ஆடையுடன் இருந்த சுவாதி அங்கிருந்தபடியே போலீஸ் கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுவாதியை மீட்டனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
போலீஸ் நிலையத்தில் சுவாதி தனக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பேட்ராயனபுரா போலீசார் அபிசேக்கை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மற்றொரு நபர் ராஜுவை தேடி வருகின்றனர்.
No comments: