பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!
மஞ்சப்பை படத்தின் வெற்றிக்குப் பிறகு விமலின் மார்க்கெட் விண்ணைத்தொட ஆரம்பித்திருக்கிறது. களவாணி, வாகை சூட வா என ஒருசில படங்களில் மட்டுமே பெரிய வெற்றியை சந்தித்த விமல், பல படங்களில் சிறப்பாக நடித்தும் அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்த மஞ்சப்பை அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை வாங்கியதால் பல கோடி செலவு செய்து பப்ளிசிட்டி செய்தனர். அதன் காரணமாக மஞ்சப்பை படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்ததோடு வசூலிலும் குறைவைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றி விமலை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க வைத்திருக்கிறது. இதற்கிடையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்க விமலை அணுகினார்கள். பாரதிராஜாவின் படங்களில் நடித்த கதாநாயகன்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமையை நினைத்துப்பார்த்த விமல், தற்போது டேட் இல்லை பிறகு பார்க்கலாம் என்று நாசூக்காக மறுத்துவிட்டாராம்.
No comments: