திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வியை கண்டது. இதையடுத்து தி.மு.க., தனது கட்சி அமைப்பில் மறு சீரமைப்பு செய்துள்ளது. இதன்படி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அமைப்புகள் 65 ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியி இருந்து நடிகை குஷ்பூ விலகியுள்ளார். கட்சியில் தன்னுடைய உழைப்பும் அர்பணிப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திமுக தலமைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments: