குடிபோதையில் நடிகை சுருதிஹாசனின் ஓட்டல் அறைக்கதவை தட்டிய ரசிகர்
நடிகை சுருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்து வருகிறது.
இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதே போல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ருதியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கே வந்து தாக்கினார். இதையடுத்து ஸ்ருதி மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: