Header Ads

ஹேட் ஸ்டோரி-2 ல் குத்துபாட்டுக்கு ஆடும் சன்னி லியோன்

ஜெய் பன்சாலி,சுர்வீன் சாவ்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ள படம் ஹாட் ஸ்டோரி-2 இந்த படத்தை விஷால் பாண்டே இயக்கியுள்ளார். டி.சீரிஸ் நிறுவனத்தின் விக்ரம் பட் இந்த படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அந்த டிரைலரின் உடலுறவு காட்சிகள் உள்பட படுகவர்ச்சியான கிளாமர் காட்சிகளும் இடம்பெற்றிருந்ததால், டிரைலருக்கே கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த படத்தில் படுபயங்கரமாக கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றதால் மகளிர் அமைப்புகள் மும்பையில் சமீபத்தில் போராட்டங்கள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் இருக்கின்ற கவர்ச்சி போதாதென்று, சன்னிலியோனின் குத்துபாடல் ஒன்றை புதிதாக சேர்க்கவுள்ளதாக படத்தின் இயக்குனர் விஷால் பாண்டே தெரிவித்துள்ளார். சன்னிலியோன் நடித்த பேபி டால் என்ற படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றிய மீட் பிரதர்ஸ் இந்த குத்துப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர். இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. ஹேட் ஸ்டோரி 2, வரும் செப்டம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.