சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறாரா சமந்தா?
மான்கராத்தே' படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும்படம் 'டாணா' இப்படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார்.
துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனுஷ் தன்னுடைய ஃவுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இதைடுத்து சிவகார்த்திகேயன் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இயக்குநர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இச்செய்தி உறுதி செய்யப்படவில்லை.
No comments: