முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் - சமந்தா நடிக்கும் படம்... ஜனவரியில் வெளியாகிறது!
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் - சமந்தா நடிக்கும் புதிய படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் நிறுவனமும் - பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு குறுகிய காலத் தயாரிப்பாகும். தமிழ் ரசிகர்கள் இடையே தரமான படங்களை வழங்கும் நிறுவனங்கள் என பெயர் எடுத்த இந்த இரு நிறுவனங்களும், விஜய் மில்டன் கதை, திரைகதை, அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்கும் படத்தைதான் தங்களது அடுத்த படமாகத் தேர்வு செய்துள்ளன. மில்டனின் கதை ஒன்றை கேட்டுப் பாராட்டிய விக்ரம், உடனடியாக தன்னுடைய தேதிகளை வழங்கி உள்ளார். ஐ படத்தில் வாய்ப்பைத் தவற விட்ட சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இமான் இசை அமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் இயற்ற பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் இன்று தொடங்கியது. அடுத்த இரண்டு மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து, வரும் ஜனவரியில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
No comments: