Header Ads

எதிர்ப்பு அடங்கியதால் லைகா பெயரிலேயே தயாரிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டபோது பலத்த சர்ச்சையில் சிக்கியது. கத்தி படத்தைத் தயாரிக்கும் லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் நிறுவன அதிபர் சுபாஸ்கரன், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவர் என்பதே அந்த சர்ச்சை. அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களும் வெளியாகின. எனவே கத்தி படத்துக்கு மட்டுமின்றி, அப்படத்தின் நாயகன் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக இலங்கை தமிழர்கள் மத்தியில் இவர்களிருவருக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று யோசித்த தயாரிப்பாளர் தரப்பு, லைகா புரடக்ஷன்ஸ் என்ற பேனரில் தயாரிக்காமல் அவர்களின் பார்ட்னரான ஐங்கரண் இண்டர்நேஷனல் பெயரில் கத்தி படத்தை தயாரிக்கலாம். அப்படி செய்வதன் மூலம் கத்தி படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பை அடக்க முடியும் என்று தீர்மானித்தனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கத்தி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதில் ஐங்கரண் இண்டர்நேஷனல் பெயரே இல்லை. மாறாக, லைகா புரடக்ஷன்ஸ் என்ற பெயரே உள்ளது. இடையில் என்ன நடந்தது? ஏன் மாற்றம்? கத்தி படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு சில நாட்களிலேயே அடங்கிவிட்டதால் இனி எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்று நினைத்ததாம் சுபாஸ்கரன் தரப்பு. அதனாலேயே தன் பேனரிலேயே கத்தி படம் தயாராகட்டும் என்று சொல்லிவிட்டாராம்.

No comments:

Powered by Blogger.