அஜீத்துக்காக விவேக் செய்த தியாகம் :
அஜீத்துடன் காதல் மன்னன், வாலி, முகவரி,
பூவெல்லாம் உன் வாசம், ஆழ்வார், கிரீடம்
உள்பட பல படங்களில் இணைந்து நடித்தவர்
விவேக்.இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில்
உருவாகி வரும் புதிய படத்திலும் அஜீத்துடன்
விவேக் நடித்து வருகிறார்.#அஜீத் மற்றும்
விவேக் ஆகியோர் நல்ல நண்பர்கள்
என்று நமக்கு தெரியும். ஆனால் இவர்கள்
இருவரும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்ற
செய்தியை அறிந்தால் மிகவும்
ஆச்சரியப்படுவீர்கள்.அதாவது உன்னைத்
தேடி என்ற படத்தின் படப்பிடிப்பின்ப
ோது அஜீத் தீராத முதுகுவலியால்
அவதிப்பட்டார். ஆனாலும் வலியை பொருத்துக்
கொண்டு படப்பிடிப்பில்
கலந்து கொண்டார்.ஆனால்,
அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும் என்று டாக்டர்கள்
அறிவுரை சொன்னதால், அதற்கான ஏற்பாடுகள்
நடந்தது.இந்த விஷயத்தை அறிந்த விவேக் 48
நாட்கள் திருத்தணி முருகப்
பெருமானுக்கு மாலையணிந்து விரதம்
இருந்தாராம்.பின்
அஜீத்துக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில்
நடந்து வெற்றியடைந்ததால் சந்தோஷம்
அடைந்து விரதத்தை முடித்தாராம்
#விவேக்.என்ன ஒரு நட்பு…. சூப்பர் ஜி சூப்பர்
ஜி
No comments: